T-122 2/4
எப்படி பாடுவேன் நான் - என் 
இயேசு எனக்குச் செய்ததை 
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் - 
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2 
1 . ஒரு வழி அடையும் போது 
புதுவழி திறந்த தேவா 
திறந்த வாசலை என் வாழ்க்கையில் 
அடைக்காத ஆண்டவரல்லோ 
2 . எப்பக்கம் நெருக்கப்பட்டும் 
ஒடுங்கி நான் போவதில்லை 
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே 
எப்போதும் பாடிடுவேன் 
3 . கடந்து வந்த பாதையில் 
கண்மணி போல் காத்திட்டீர் 
கடுகளவும் குறை வைக்காமலே 
அதிகமாய் ஆசீர்வதித்தீர் 
 Eppati Paaduvaen Naan - En
 Yesu Enakkuch Seythathai
 Aayul Muluvathum En Karththarukkaay
 Aaththuma Aathaayam Seyvaen - 2
1. Oru Vali Ataiyum Pothu
 Puthuvali Thirantha Thaevaa
 Thirantha Vaasalai En Vaalkkaiyil
 Ataikkaatha Aanndavarallo
2. Eppakkam Nerukkappattum
 Odungi Naan Povathillai
 Appanin Maarpinil Saaynthentumae
 Eppothum Paadiduvaen
3. Kadanthu Vantha Paathaiyil
 Kannmanni Pol Kaaththittir
 Kadukalavum Kurai Vaikkaamalae
 Athikamaay Aaseervathiththeer
 
