T-100 4/4
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் 
காரியம் வாய்க்கச் செய்தாரே 
எத்தனை எத்தனை நன்மைகளோ 
இயேசப்பா செய்தாரே - நான் 
இறுதிவரை என் வாழ்வு 
இயேசப்பா உமக்குத்தானே - 2 
1 . கால்கள் தள்ளாட விடமாட்டார் 
காக்கும் தேவன் உறங்க மாட்டார் 
இஸ்ராயேலைக் காக்கிறவர் 
எந்நாளும் தூங்க மாட்டார் - இறுதி 
2 . கர்த்தர் என்னைக் காக்கின்றார் 
எனது நிழலாய் இருக்கின்றார் 
பகலினிலும் , இரவினிலும் 
பாதுகாக்கின்றார் 
3 . போகும் போதும் காக்கின்றார் 
திரும்பும் போதும் காக்கின்றார் 
இப்போதும் , எப்போதும் 
எந்நாளும் காத்திடுவார் 
Karththarai Thaetina Naatkalellaam
 Kaariyam Vaaykkach Seythaarae
 Eththanai Eththanai Nanmaikalo
 Iyaesappaa Seythaarae – Naan
Iruthivarai En Vaalvu
 Iyaesappaa Umakkuththaanae
1.Kaalkal Thallaada Vidamaattar
 Kaakkum Thaevan Uranga Maattar
 Israayaelaik Kaakkiravar
 Ennaalum Thoonga Maattar – Iruthi
2.Karththar Ennaik Kaakkintar
 Enathu Nilalaay Irukkintar
 Pakalinilum, Iravinilum
 Paathukaakkintar
3.Pokum Pothum Kaakkintar
 Thirumpum Pothum Kaakkintar
 Ippothum, Eppothum
 Ennaalum Kaaththiduvaar
 
 
                            