T-85 4/4
நன்றி நன்றி என்று 
நன்றி நன்றி என்று 
நாள் முழுதும் துதிப்பேன் . 
நாதா உம்மைத் துதிப்பேன் 
1 . காலையிலும் துதிப்பேன் 
மாலையிலும் துதிப்பேன் 
மதியத்திலும் துதிப்பேன் 
இரவினிலும் துதிப்பேன்  
2 . உண்ணும் போதும் துதிப்பேன் 
உறங்கும் போதும் துதிப்பேன் 
அமரும் போதும் துதிப்பேன் 
நடக்கும் போதும் துதிப்பேன் 
3 . வாழ்த்தும் போதும் துதிப்பேன் 
தாழ்த்தும் போதும் துதிப்பேன் 
நெருக்கத்திலே துதிப்பேன் - பிறர் 
வெறுக்கும் போதும் துதிப்பேன் 
4 . சகாயரே தயாபரரே 
சிநேகிதரே என் சிருஷ்டிகரே 
5 , சத்தியமே ( என் ) நித்தியமே 
என் ஜீவனே நல் ஆயனே 
6 . உன்னதமே உயர்ந்தவரே 
( என் ) பரிகாரியே பலியானிலே
 
