T-115 6/8
ஒருநாளும் வீணாகாது
நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒரு நாளும் வீணாகாது
1 . கர்த்தரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார்
அவர் விருப்பம் நீ செய்திட
ஆற்றல் தருகின்றார்
தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே
பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே - ஒருநாளும்
2 . பிடித்துக் கொள் ஜீவவசனம்
பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்
நெறி கெட்ட சமுதாயத்தில்
நீதானே நட்சத்திரம் - தொடர்ந்து
3 . அவமானம் நிந்தை எல்லாம்
அனுதின உணவு போல
பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம்
பெலன் தரும் ஊட்டச்சத்து - தொடர்ந்து
4 . கண்களை பதித்துவிடு
கர்த்தராம் இயேசுவின் மேல்
சிலுவை சுமந்ததனால்
சிங்காசனம் அமர்ந்துவிட்டார் - தொடர்ந்து
Orunaalum Veennaakaathu
Nee Odum Ottam Nee Seyyum Ooliyam
Oru Naalum Veennaakaathu
1. Karththarae Unakkullae
Seyalaatti Makilkintar
Avar Viruppam Nee Seythida
Aattal Tharukintar
Thodarnthu Odu Vittuvidaathae
Panni Seyvathai Nee Niruththividaathae – Orunaalum
2.Pitiththuk Kol Jeevavasanam
Pirakaasi Kiristhu Yesuvukkaay
Neri Ketta Samuthaayaththil
Neethaanae Natchaththiram-Thodarnthu
3.Avamaanam Ninthai Ellaam
Anuthina Unavu Pola
Palichchaொl Ethirppu Ellaam
Pelan Tharum Oottachchaththu-Thodarnthu
4. Kannkalai Pathiththuvidu
Karththaraam Yesuvin Mael
Siluvai Sumanthathanaal
Singaasanam Amarnthu Vittal- Thodarnthu