L o a d i n g
WhatsApp
WhatsApp

T-125 2/4

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார் - இயேசு - 2

யார் இந்த ராஜா மகிமையின் ராஜா - 2 - தலைகள்

1 . வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
கதவுகளே திறந்து வழிவிடுங்கள் - 2
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும் - 2
உள்ளே நுழையட்டும் - யார் இந்த

2 . மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடமை அன்றோ - 2
தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
இரட்சகர் இயேசுவை - 2
இரட்சகர் இயேசுவை - யார் இந்த

3 . கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார் ?
அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார் ? - 2
சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
உடையவன் தானே - 2
உடையவன் தானே - தலைகள்

4 . கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்
அவராலே ஆசீர் பெற்ற சபை நாம் - 2
நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு
தீர்ப்பு கூறிவிட்டார் - 2
தீர்ப்பு கூறிவிட்டார்



Thalaikal Uyarattum Kathavu Thirakkattum
Iraajaa Varukiraar-Yesu

Yaar Intha Raajaa…. Makimaiyin Raajaa

Vaasalkalae Thalaikalai Uyarththungal
Kathavukalae Thiranthu Valividungal
Pataikalin Aanndavar Paraakkiramam Nirainthavar
Ullae Nulaiyattum

Mannnulakam Karththarukku Sonthamanto
Athan Kutikal Ellaam
Avarin Udamai Anto
Thaeduvom Avarai Naaduvom Thinamum
Iratchakar Yesuvai

Karththar Malaimael Aeraththakunthavan Yaar?
Avar Samookaththilae Nirkaththakunthavan Yaar?
Suththamaana Kaikal Thooymaiyaana Ithayam
Utaiyavan Thaanae

Karththar Samookam Thaedum Samuthaayam Naam
Avaraalae Aaseer Petta Sapai Naam
Neethimaankal Entu Karththar Thaamae Namakku
Theerppu Koorivittar