T-95 4/4
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு 
அழுத்தும் சுமைகளை ( தினம் ) 
பற்றும் பாரங்களை - உன்னை 
பொறுமையுடன் நீ ஓடு ( என் ) 
நேசரின் மேல் கண் வைத்து ஓடு 
1 . மேகம் போன்ற திரள் கூட்டம் 
பரிசு பெற்று நிற்கின்றனர் 
முகம் மலர்ந்து கை அசைத்து 
வா வா வா என்கின்றனர் 
( ஓடி வா என்கின்றனர் ) - பொறுமையுடன் 
2 . அவமானத்தை எண்ணாமல் 
சுமந்தாரே சிலுவைதனை 
அமர்ந்து விட்டார் அரியணையில் 
அதிபதியாய் அரசனாய் 
3 . தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம் 
தாங்கிக் கொண்ட இரட்சகரை 
சிந்தையில் நாம் நிறுத்தினால் 
சோர்ந்து நாம் போவதில்லை  
Utharith Thallu Thookki Erinthidu
Aluththum Sumaikalai (Thinam)
Pattum Paarangalai – Unnai
Porumaiyudan Nee Odu ( En )
Naesarin Mael Kann Vaiththu Odu
1.Maekam Ponta Thiral Koottam
Parisu Pettu Nirkintanar
Mukam Malarnthu Kai Asaiththu
Vaa Vaa Vaa Enkintanar
(Oti Vaa Enkintanar) – Porumaiyudan
2.Avamaanaththai Ennnnaamal
Sumanthaarae Siluvaithanai
Amarnthu Vittar Ariyannaiyil
Athipathiyaay Arasanaay
3.Thamakku Vantha Ethirppellaam
Thaangik Konnda Iratchakarai
Sinthaiyil Naam Niruththinaal
Sornthu Naam Povathillai
 
 
                            