L o a d i n g
WhatsApp
WhatsApp

T=128 3/4

உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்
புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது

வல்ல செயல்களால் என்னை மகிழ்வித்தீர்
மகிழ்ந்து பாடுவேன் முழு உள்ளத்தோடு
காலை மாலை மதியம் உம் கிருபையில் மகிழ்வேன்
நம்பத்தக்க உம்வாக்கு நாள்தோறும் தியானம் செய்வேன்

காட்டு விலங்கிற்கு நிகரான வலிமை
எனக்குத் தந்தீரே நன்றி ஐயா
புது எண்ணெயாலே அபிஷேகம் செய்தீர்
சாத்தானின் வீழ்ச்சிதனை கண்ணால் நான் தினம் காண்பேன்

அல்லேலூயா

நீதிமான் நானே பனையைப்போல் வளர்வேன்
கேதுருமரம் போல் பெலன் எனக்குள்ளே
கர்த்தர் இல்லத்தில் நடப்பட்டவன் நான்
அவர் சமூகத்தில் குடியிருந்து வாழ்ந்திடுவேன் வளர்ந்திடுவேன்

இயேசய்யா

கன்மலையான என் கர்த்தர் உத்தமர்
அநீதியில்லை என்று விளங்கப்பண்ணுவேன்
முதிர் வயதிலும் நான் கனிகள் தருவேன்
பசுமையும் செளழுமையும் நிறைந்து வாழ்ந்திடுவேன்