T-125 3/4
உம்மைதான் நினைக்கிறேன்
வசனம் தியானிக்கிறேன்
நீர் எனக்கு துணையாயிருப்பதால்
நிழலில் அகமகிழ்கின்றேன்
இயேசய்யா - 4
1. தேவனே நீர் என் தேவன்
அதிகாலமே தேடுகிறேன் - 2
தண்ணீர் இல்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன்
என் உடலும் உமக்காக
இயேசய்யா ஏங்குதைய்யா
2. உம் இரக்கம் உம் தயவு
மேலானது என் உயிரைவிட
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மையே நான் துதிப்பேன்
உமது நாமம் சொல்லி
கைகளை உயர்த்துகிறேன்
3. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இரவுநேரம் தியானிக்கின்றேன்
உமது வலது கரம்
தினம் தினம் தாங்குதைய்யா
உம்மையே இறுதிவரை
விடாது பற்றி கொண்டேன்
4. சுவையான உணவு உண்பதுபோல்
திருப்தியானேன் உம்நிழலில்
ஆனந்த களிப்புள்ள
உதடுகளால் துதிப்பேன்
அப்பாவின் கிருபையில்தான்
அனுதினம் வாழ்கின்றேன்
Ummaithaan ninaikkindren
Vasanam thiyanikindren
Neer enaku thunaiyaai irupathaal
Nilalil aga magilkindren
Yessaiyya yessaiyya
Ratchagarey immanuel
1.Devanae neer en devan
Adhigalamey thedugiren
Thanner illa nilam pola thagamai irukirean
Enn udalum umakkaaga yessaiyya enguthaiyya
2.Umm irakkam umm thayavu
Melanathu uyirai vida
Jeevanulla naatkalellam ummaiyea naan thuthipen
Umathu naamam solli kaigalai uyarthugirean
3.Suvaiyana unavu unbathu pol
Thirupthiyanean um uravil
Aanandha kalipulla udhadugalaal thuthipean
Appavin kirubayil thaan anuthinam vaalgindren
4.Padukaiyilum ninaikkindren
Iravu neram thiyaanikindreean
Umathu valathu karam thinamum thaanguthaiyya
Ummaiyea iruthivarai vidathu pattrikondean